சுதந்திரத்திற்கான ஃப்ரீட்ரிக் நௌமன் அறக்கட்டளை (குNகு)க்கும் இலங்கைக்குமான தொடர்பு ஏறத்தாழ ஐந்துதசாப்தங்கள் பழமையானது.
1968- 2013 இடைப்பட்ட காலப்பகுதியிலும், 2016 இல் மீண்டும் மீளஆரம்பிக்கப்பட்டபோதும், எமதுஅறக்கட்டளையின் செயற்பாடுகள் சுதந்திரம் மற்றும் அது தொடர்பான பொறுப்புக்களைஅடிப்படை நோக்காகக் கொண்டே காணப்பட்டடன. எமது அறக்கட்டளையின் மூலமாக சமீப காலமாகஇலங்கையின் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பானது பல சட்டவல்லுநர்கள், கல்வியியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பலரால் நன்குஅங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.