தாராண்மைவாதம் என்பது சமூக ஒத்துழைப்புக்கான தீர்வு

liberalvalues.lk என்றால் என்ன?

தாராண்மைவாத அடிப்படைகளை காணொளித் தொடர்கள் மூலமாகவும், குரல்பதிவுத் தொடர்களைக் கேட்பதின் மூலமாகவும், கட்டுரை ஆக்கங்களை வாசிப்பதன் மூலமாகவும், விவாதங்கள் மற்றும் கேள்வி பதில்களின் மூலமாகவும்அறியக்கூடிய ஒரு பன்மொழி டிஜிட்டல் வலைப்பக்கத் தளம். பல நூற்றாண்டுகளாகதாராண்மைவாதமானது அதன் பிரதான கருதுகோள்களின் அடிப்படையில் பலபிரிவுகளுக்குள்ளாகியுள்ளது. எவ்வாறிருப்பினும், தாராண்மைவாதிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 8 அடிப்படை விழுமியங்கள் காணப்படுகின்றன. தாராண்மைவாதகருத்துக்களை அதன் அடிப்படையிலிருந்து விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இத் தளம்செயற்படுகின்றது.

ஏன் liberalvalues.lk?

இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னான காலத்திலிருந்து ஆழ்ந்த பொதுநிதியுதவிக் கல்விமுறை காணப்படுகின்றது. இருந்தபோதிலும், பாடத்திட்டமானது முதன்மையாக இயற்கை அறிவியல் பாடங்களை(ளுவுநுஆ மற்றும் பல) அடிப்படையாகக் கொண்டதுடன், உயர்நிலைக் கல்வியில் சமூக அறிவியல் பாடங்களானஉளவியல், சர்வதேச உறவுகள், அபிவிருத்தி,சட்டம் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இலங்கை கல்வி முறையின் பாடத்திட்டமானது பலதசாப்தகாலமாக தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்ற உலகளாவிய அறிவினை அடிப்படையாகக்கொண்டு மேம்படுத்தப்படவில்லை. இதனால், இத் திட்டமானது உலகளவில் பிரபல்யமான சமூக அறிவியல் கருப்பொருளான தாராண்மைவாதம்தொடர்பான கருத்துக்களை, இலங்கை மக்களுக்கு அதன் புரிந்துணர்வை ஏற்படுத்துவதையும், தெளிவுபடுத்தலையும் நோக்காகக் கொண்டுள்ளது. டுiடிநசயடஎயடரநள.டம இன் குறிக்கோளானது இலங்கையர்களிடையேதாராண்மைவாதம் பற்றிய தெளிவான மற்றும் சரியான புரிதலை ஏற்படுத்தி வளர்ப்பதுடன், சுயமுடிவெடுக்கக்கூடிய, சுதந்திரமான மற்றும் அதிகாரம் பெற்ற குடிமக்களாகஅவர்களை வலுப்படுத்துவதும் ஆகும்.

liberalvalues.lk ஐஎவ்வாறு பயன்படுத்துவது?

இந்த டிஜிட்டல் வலைத்தளமானது தாராண்மைவாத அடிப்படை விழுமியக் கருத்துக்கள்தொடர்பான 10 காணொளி, குரல்பதிவுகள் மற்றும் கட்டுரை ஆக்கத் தொடர்களைக்கொண்டமைந்துள்ளது. இதனூடாக தாராண்மைவாத கருத்துக்களை ஒருவர் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூலமாக பார்த்து, கேட்டு, வாசித்து அறிந்துகொள்ளமுடியும். எதிர்வரும் காலங்களில் இக் கருத்துக்களுடன்தொடர்புடைய செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை அறிமுகப்படுத்துவதுடன், இவ் வலைத்தளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்புக்கள்கூடிய விரைவில் வெளியிடப்படும். தாராண்மைவாத அடிப்படை தொடர்களை அறிந்து அதுதொடர்பான உங்கள் எண்ணங்களை, ‘பேசு’ பகுதியினூடாகஎமக்கு அறியத்தாருங்கள். இத் தொடர்களை முழுமையாக அறிவதன் ஊடாக தாராண்மைவாதம்தொடர்பான ஆழமான அறிவினையும் புரிதலையும் பெறுவதுடன், இது தொடர்பான மேலதிக ஆராய்ச்சிகள் அபிவிருத்தி, சுதந்திர வர்த்தகம், சர்வதேச பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகள், இறையாண்மை,சர்வதேச சட்டங்கள் மற்றும் பல உலகளாவிய விழுமியங்களை வளர்க்க உதவும்.