எங்களைப் பற்றி

2007ம் ஆண்டிலிருந்து எமதுஅறக்கட்டளையின் பெயருடன் ‘சுதந்திரத்திற்காக’ எனும் சொற்தொடர் சேர்த்துநிறுவப்பட்டது. தற்காலத்தில், சுதந்திரம் என்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதுவே சுதந்திரத்திற்கானபிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், அவற்றுடன் இணைந்த பொறுப்புக்களை பொறுப்பேற்பதுடன், அதன் நீடித்த எதிர்காலத்திற்கான செயற்பாடுகளையும்வலியுறுத்துகின்றது. 1958 மே மாதம் 19ம் திகதிஆரம்பிக்கப்பட்ட குNகு அறக்கட்டளையானது, இதனையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றது. இதன் தலைமைக் காரியாலயம்போட்ஸ்டாம் (பெர்லின் இற்கு அருகாமையில்) இல் அமைந்துள்ளதுடன், ஜெர்மனியின் பல இடங்களிலும், 60 இற்கும் மேற்பட்ட நாடுகளிலும் இதன் அலுவலகங்கள்செயற்படுகின்றன.

செயற்திட்டம

இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னான காலத்திலிருந்து ஆழ்ந்த பொதுநிதியுதவிக் கல்விமுறை காணப்படுகின்றது. இருந்தபோதிலும், பாடத்திட்டமானது முதன்மையாக இயற்கை அறிவியல் பாடங்களை(ளுவுநுஆ மற்றும் பல) அடிப்படையாகக் கொண்டதுடன், உயர்நிலைக் கல்வியில் சமூக அறிவியல் பாடங்களானஉளவியல், சர்வதேச உறவுகள், அபிவிருத்தி,சட்டம் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இலங்கை கல்வி முறையின் பாடத்திட்டமானது பலதசாப்தகாலமாக தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்ற உலகளாவிய அறிவினை அடிப்படையாகக்கொண்டு மேம்படுத்தப்படவில்லை. இதனால், இத் திட்டமானது உலகளவில் பிரபல்யமான சமூக அறிவியல் கருப்பொருளான தாராண்மைவாதம்தொடர்பான கருத்துக்களை, இலங்கை மக்களுக்கு அதன் புரிந்துணர்வை ஏற்படுத்துவதையும், தெளிவுபடுத்தலையும் நோக்காகக் கொண்டுள்ளது. டுiடிநசயடஎயடரநள.டம இன் குறிக்கோளானது இலங்கையர்களிடையேதாராண்மைவாதம் பற்றிய தெளிவான மற்றும் சரியான புரிதலை ஏற்படுத்தி வளர்ப்பதுடன், சுயமுடிவெடுக்கக்கூடிய, சுதந்திரமான மற்றும் அதிகாரம் பெற்ற குடிமக்களாகஅவர்களை வலுப்படுத்துவதும் ஆகும்.    

பிராந்திய கிளை அலுவலகம் - கொழும்பு

சுதந்திரத்திற்கான ஃப்ரீட்ரிக் நௌமன் அறக்கட்டளை (குNகு)க்கும் இலங்கைக்குமான தொடர்பு ஏறத்தாழ ஐந்துதசாப்தங்கள் பழமையானது.

1968- 2013 இடைப்பட்ட காலப்பகுதியிலும், 2016 இல் மீண்டும் மீளஆரம்பிக்கப்பட்டபோதும், எமதுஅறக்கட்டளையின் செயற்பாடுகள் சுதந்திரம் மற்றும் அது தொடர்பான பொறுப்புக்களைஅடிப்படை நோக்காகக் கொண்டே காணப்பட்டடன. எமது அறக்கட்டளையின் மூலமாக சமீப காலமாகஇலங்கையின் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பானது பல சட்டவல்லுநர்கள், கல்வியியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் பலரால் நன்குஅங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.