LIVE TOTO | ALEXISTOTO | LINK TOTO

LIVETOTO adalah Agen Toto Live resmi yang menawarkan pengalaman bermain yang aman dan terpercaya. Dengan berbagai jenis permainan togel dan agen togel 100Perak, pengguna dapat menikmati kemudahan dalam memasang taruhan. Platform Livetoto ini dirancang untuk memberikan layanan terbaik dengan dukungan pelanggan yang responsif, serta sistem transaksi yang cepat dan aman. jadi tunggu apa lagi! langsung bergabung dengan Agen Live Toto untuk meraih peluang menang yang lebih besar dan nikmati permainan togel dengan nyaman.

கேட்க

தாராண்மைவாதத்தின் விழுமியக் கருத்துக்களை கேட்டு அறியக்கூடிய 10 குரல்பதிவுகள் இங்கே காணப்படுகின்றன.

தாராண்மைவாதம் என்பது சுதந்திரம், தனிமனிதவாதம், அதிகாரத்திற்கான அவநம்பிக்கை, ஆட்சிக்கான சட்டம், சகிப்புத்தன்மை, சமாதானம், பொறுப்புக்கள், தன்னிச்சையான ஒழுங்குகள் போன்ற பல்வேறுபட்ட கூறுகளைஉள்ளடக்கிய ஒரு தர்க்கரீதியான செயற்பாட்டுப் பார்வையாகும்.

நீங்கள் காணொளிகளை பார்க்க விரும்பாத நேரங்களிலும், பயணம் செய்யும் போதோ, சமையலில் ஈடுபடும் போதோ, திரைகளின் பாவனை தவிர்ந்த எந்தவொரு வேறுசெயற்பாடுகளின் போதோ இந்த தொடர்களைக் கேளுங்கள்.

10 தொடர்களையும்கேட்டபின்னர் உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் எங்களுக்குஅறியத்தாருங்கள்.

01. தாராண்மைவாதத்திற்கான அறிமுகம்

தாராண்மைவாதம் என்பது சுதந்திரம், தனிமனிதவாதம், அதிகாரத்திற்கான அவநம்பிக்கை, ஆட்சிக்கான சட்டம், சகிப்புத்தன்மை, சமாதானம், பொறுப்புக்கள், தன்னிச்சையான ஒழுங்குகள் போன்ற பல்வேறுபட்ட ஒத்த கருத்துக்களையுடைய கூறுகளை உள்ளடக்கிய ஒரு தர்க்கரீதியான செயற்பாட்டுப் பார்வையாகும்.

02. சசுதந்திரம்

சுதந்திரம் என்பது தாராண்மைவாதத்தின் முக்கியமான விழுமியம் ஆகும். ஒருவர் அவர் விரும்பியதை விரும்பியபடி செய்யும் திறனை இது வழங்குகிறது. எனவே, சுதந்திரம் என்பது சட்டத்தின் கீழ், இன்னொருவரின் சுதந்திரத்தைப் பாதிக்காதவாறு தனது சுதந்திரத்தை பொறுப்பாகப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது.

03. தனிமனிதவாதம்

தனிமனிதவாதம் எனப்படுவது ஒவ்வொரு தனிநபரும் ஒருவருக்கொருவர் சுயாதீனமான மற்றும் தனித்துவமானவர் என்னும் கருதுகோளாகும். இது ஒருவரது தனிப்பட்ட விடயங்களில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதையும் சார்ந்தது. தாராண்மைவாத சமூகத்தின் பார்வையில், தனிமனிதன் முக்கிய குறிக்கோளாக கொள்ளப்படுகின்றார்.

04. அதிகாரம் பற்றிய அவநம்பிக்கை

அதிகாரம் பற்றிய அவநம்பிக்கை என்பது அதிகாரத்திலுள்ள எமது நடத்தையின் தாக்கம் பற்றிய மனிதனின் உளரீதியான ஆழமான அறிவாகும். சுரண்டல் மற்றும் ஆதிக்கத்தின் மூலமான அதிகார து~;பிரயோகம் போன்றவற்றின் சாத்தியக்கூறுகளை உணர்தலாகும்.

05. ஆட்சிக்கான சட்டம்

அதிகார து~;பிரயோகத்தினைத் தடுக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஒரு கருவியே ஆட்சிக்கான சட்டம் ஆகும். ஆட்சியாளர்களின் நோக்கம் நன்மையானதாக இருந்தாலும் கூட, எந்தவொரு ஆட்சியாளரினதும் தன்னிச்சையான விருப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் நிறுவனங்களை இது உள்ளடக்கியது.

06. சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை என்பது தாராண்மைவாதத்தின் முக்கியமானதொரு விழுமியமாகவும், அனைத்து சட்டங்களையும், விழுமியங்களையும் மதிப்பதனை அடிகோலுவதாகும். சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொரு தனிநபரின் மதிப்பை அடையாளம் காணவும், மிக முக்கியமாக நமது நவீன சமூக ஒத்துழைப்பின் மூலம் சமூகங்களில் அமைதியை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

07. அமைதி

அமைதி என்பது சமூக வாழ்க்கையின் அனைத்து கூறுகளுக்கும் பொருந்தும் ஒரு அடிப்படை விழுமியம் ஆகும். ஒரு தாராளவாதியின் அடிப்படையில் அமைதி ஒரு தனிநபரின் செயலாண்மை ஆகும். இது ஒரு கருத்துவேறுபாட்டின் வற்புறுத்தலுக்குப் பதிலாக கருத்தைத் தூண்டும் சக்தியாக காணப்படும்.

08. பொறுப்பு

தாராண்மைவாதிகள் பொறுப்பு என்னும் கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனைத் தழுவுகின்றனர். தாராளவாதிகள் எல்லாவற்றையும் விட தனிமனிதர்களை அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், சமூக வாழ்வில் ஈடுபாட்டுடன் கலந்துகொள்ள அதிகாரமளிக்கவும் பொறுப்பினைக் கைக்கொள்வதன் மூலம் நம்புகின்றனர்.

09. தன்னிச்சையான ஒழுங்கு

தாராண்மைவாதிகள் தனிமனித சக்தியினை நம்புகின்றனர் அனால் அதனை உயர் குறிக்கோளாக்குவதில்லை. அவர்கள் கண்டுபிடிப்புக்களும் புதுமையான சிந்தனைகளும் தனிமனித சிந்தனையிலிருந்து தோன்றவில்லை எனக் கருத்துவதுடன், சுதந்திரமான தனிநபர்களின் ஒத்துழைப்பின் தொடர்ச்சியான கூட்டுச்செயன்முறைகளின் மூலமான விளைவாகவே அதனை நம்புகின்றனர்.

10. முடிவுச் சுருக்கம்

தாராண்மைவாதம் எனப்படுவது இந்த 8 அடிப்படை விழுமியக் கருத்துக்களை முழுமையாக விளங்கிக்கொள்வதன் மூலம் மனிதர்களை மேலும் சிறந்தவர்களாக செயற்படுத்தலாகும்.