பார்க்க

தாராண்மைவாதத்தின் விழுமியக் கருத்துக்களை சரியான மற்றும் இலகுவான முறையில்அறியப்படுத்தக் கூடிய 10 காணொளிகள் இங்கே காணப்படுகின்றன.

இக் காணொளிகள் எளிமையாகவும், ஆக்கபூர்வமான காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தாராண்மைவாதக் கருத்துக்களைஇலகுவாக புரிந்து கொள்ளக்கூடியதாகக் காணப்படுகின்றன.

தாராண்மைவாதம் என்பது சுதந்திரம், தனிமனிதவாதம், அதிகாரத்திற்கான அவநம்பிக்கை, ஆட்சிக்கான சட்டம், சகிப்புத்தன்மை, சமாதானம், பொறுப்புக்கள், தன்னிச்சையான ஒழுங்குகள் போன்ற பல்வேறுபட்ட கூறுகளைஉள்ளடக்கிய ஒரு தர்க்கரீதியான செயற்பாட்டுப் பார்வையாகும்.

இக் காணொளித் தொகுப்புக்களை பார்வையிட்டு முடித்தபின்னர், உங்களது கருத்துக்களை எமக்கு அறியத்தாருங்கள்.பகிர்தல் முறைகளின் மூலமாக உங்கள் நண்பர்கள்,குடும்பத்தினர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இக் கருத்துக்களைப்பகிர்ந்துகொள்ளுங்கள்.

01. தாராண்மைவாதத்திற்கான அறிமுகம்

தாராண்மைவாதம் என்பது சுதந்திரம், தனிமனிதவாதம், அதிகாரத்திற்கான அவநம்பிக்கை, ஆட்சிக்கான சட்டம், சகிப்புத்தன்மை, சமாதானம், பொறுப்புக்கள், தன்னிச்சையான ஒழுங்குகள் போன்ற பல்வேறுபட்ட ஒத்த கருத்துக்களையுடைய கூறுகளை உள்ளடக்கிய ஒரு தர்க்கரீதியான செயற்பாட்டுப் பார்வையாகும்.

02. சசுதந்திரம்

சுதந்திரம் என்பது தாராண்மைவாதத்தின் முக்கியமான விழுமியம் ஆகும். ஒருவர் அவர் விரும்பியதை விரும்பியபடி செய்யும் திறனை இது வழங்குகிறது. எனவே, சுதந்திரம் என்பது சட்டத்தின் கீழ், இன்னொருவரின் சுதந்திரத்தைப் பாதிக்காதவாறு தனது சுதந்திரத்தை பொறுப்பாகப் பயன்படுத்துவதை உள்ளடக்குகிறது.

03. தனிமனிதவாதம்

தனிமனிதவாதம் எனப்படுவது ஒவ்வொரு தனிநபரும் ஒருவருக்கொருவர் சுயாதீனமான மற்றும் தனித்துவமானவர் என்னும் கருதுகோளாகும். இது ஒருவரது தனிப்பட்ட விடயங்களில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதையும் சார்ந்தது. தாராண்மைவாத சமூகத்தின் பார்வையில், தனிமனிதன் முக்கிய குறிக்கோளாக கொள்ளப்படுகின்றார்

04. அதிகாரம் பற்றிய அவநம்பிக்கை

அதிகாரம் பற்றிய அவநம்பிக்கை என்பது அதிகாரத்திலுள்ள எமது நடத்தையின் தாக்கம் பற்றிய மனிதனின் உளரீதியான ஆழமான அறிவாகும். சுரண்டல் மற்றும் ஆதிக்கத்தின் மூலமான அதிகார து~;பிரயோகம் போன்றவற்றின் சாத்தியக்கூறுகளை உணர்தலாகும்

05. ஆட்சிக்கான சட்டம்

அதிகார து~;பிரயோகத்தினைத் தடுக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஒரு கருவியே ஆட்சிக்கான சட்டம் ஆகும். ஆட்சியாளர்களின் நோக்கம் நன்மையானதாக இருந்தாலும் கூட, எந்தவொரு ஆட்சியாளரினதும் தன்னிச்சையான விருப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் நிறுவனங்களை இது உள்ளடக்கியது.

06. சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை என்பது தாராண்மைவாதத்தின் முக்கியமானதொரு விழுமியமாகவும், அனைத்து சட்டங்களையும், விழுமியங்களையும் மதிப்பதனை அடிகோலுவதாகும். சகிப்புத்தன்மை என்பது ஒவ்வொரு தனிநபரின் மதிப்பை அடையாளம் காணவும், மிக முக்கியமாக நமது நவீன சமூக ஒத்துழைப்பின் மூலம் சமூகங்களில் அமைதியை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.